TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
TNPSC Group 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

TNPSC குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் தேர்வு நெருங்கி விட்டதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தேர்வுக்கு தயாராகும் சில வழிமுறைகள் குறித்து காண்போம்.

குரூப் 4 VAO:

தமிழக அரசின் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் தமிழ்நாடு நீதி அமைச்சு பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலக பணி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் சார்நிலை பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணி ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் இந்த குரூப் 4 தேர்வு நடைபெறவில்லை.

TN Job “FB  Group” Join Now

அதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனையடுத்து தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மார்ச் மாதம் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் கிட்டத்தட்ட 2 மாதங்களே உள்ள நிலையில் தேர்வர்கள் அரசு வெளியிட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

திருப்பூரில் நாளை (மே 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

இதில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கபட்டுள்ளதை அடுத்து முதல் 100 வினாக்கள் தமிழில் இருந்து கேட்கப்படும். அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி பகுதியில் இருந்து கேட்கப்படும். அதனால் குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள் 180 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தயாராக வேண்டும். 6 முதல் 10 வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன.

அதனால் அதனை தெளிவாக படிக்க வேண்டும். 11 மற்றும் 12 வகுப்பு தமிழ் புத்தகங்களையும் படித்து வைத்து கொள்வதும் நல்லது. பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே இப்பகுதியில் 90 முதல் 95 மதிப்பெண்கள் பெறலாம். நடப்பு நிகழ்வுகளுக்கு (Current Affairs) தேர்வு அறிவிப்புக்கு முன் ஆறு மாதம் முதல் 1 வருடம் வரையிலான செய்திகளை படிக்க வேண்டும். கணிதப் பகுதிக்கு 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள கணித பாடங்களை படிப்பது நல்லது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!