TNDTE தட்டச்சு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – முடிவுகள் வெளியீடு!

0
TNDTE தட்டச்சு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - முடிவுகள் வெளியீடு!
TNDTE தட்டச்சு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - முடிவுகள் வெளியீடு!
TNDTE தட்டச்சு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் TNDTE தேர்வு வாரியத்தால் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளை பார்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

தட்டச்சுத் தேர்வு

தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதன்படி கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதையடுத்து அறிவித்தபடி குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. அதன்படி தற்போது அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டப்படி நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தமிழக உயர்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையங்களில் பயின்று வந்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற்றது.  இதையடுத்து இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் பணிகள் முடிவடைந்துள்ளன.  அதன்படி மதிப்பெண் பட்டியல் தயாராகி உள்ளது.  இதையடுத்து இதற்கான முடிவுகளை பெற விரும்புவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.  இதில் PDF வடிவில் தேர்வு முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில் tndte.gov.in என்ற TNDTEயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதன் முகப்பு பக்கத்தில் ‘டைப்ரைட்டிங் தேர்வு முடிவுகள் 2022’ என்ற இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இதன் கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது புதிய பக்கம் திறக்கும். இதில் தங்களின் பதிவு எண் மற்றும் உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட வேண்டும்.

4. இப்போது TNDTE தட்டச்சு தேர்வு முடிவுகள் 2022 தேர்வின் முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.

5. இறுதியாக நீங்கள் தேவைப்பட்டால் இதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!