TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு – தேர்வு வாரியம் வெளியீடு!

0
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு - தேர்வு வாரியம் வெளியீடு!
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு - தேர்வு வாரியம் வெளியீடு!
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு – தேர்வு வாரியம் வெளியீடு!

தமிழகத்தில் அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது . தமிழகம் முழுவதும் 2018-2019-ம் ஆண்டுக்கான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

தனது மகன் அர்ஷுடன் முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டிருக்கும் ஆலியா & சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு வெளியிட்டுள்ள துறையில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். அதாவது தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், வீட்டு அறிவியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். இந்த தேர்வில் கணினி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த அறிவிப்பின் படி, 2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019-ம் ஆண்டு செப்.27 முதல் 29-ம் தேதி வரை கணினி வழி போட்டித் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் 2019 அக். 18 மற்றும் 21-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 நவ. 8 மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டு, பாட வாரியாக தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வணிகவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!