TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

0
TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - உடனே பாருங்க!
TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன. தற்போது பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும்பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

TN TRB விரிவுரையாளர்:

2017-2018 ஆம் ஆண்ல் அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டன. இந்த காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணினி வழித் தேர்வுகள் ( CBT ) நடத்தப்பட்டது. தேர்வர்களின் மதிப்பெண்கள் பட்டியல் கடந்த மார்ச் 8 ஆம் தேதியில் வெளியானது.

Exams Daily Mobile App Download

தேர்வில் தகுதியானவர்களுக்கு கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவம் தொடர்பான அனைத்து கூடுதல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தேர்வானவர்கள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 வரைக்கும் பதிவேற்றம் செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. இந்த சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாகவே பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வான விண்ணப்பதாரர்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

TNPSC குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

மேலும், குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப்பிரிவுகளில் உள்ள 5 பாடங்களுக்கு 1 : 2 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வாளர்களின் அழைப்புக் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம், சுயவிவரப்படிவம் மற்றும் தமிழ்வழிச் சான்றிதழ் ( PSTM Certificate ) ஆகிய சான்றிதழ்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும், இந்த சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!