TN TET போட்டித்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் நோக்கில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TNTET தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு தேர்வர்கள் TET தேர்வில் வெற்றி பெறலாம்.
மாதிரி தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து, நடப்பாண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி அறிவித்தது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி விரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. மேலும் டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.இந்நிலையில் இரு தாள்களுக்கும் சேர்த்து மொத்தம் 6.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவி புரியும் நோக்கில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TET தேர்வின் தாள் II-க்குரிய சமூக அறிவியல் பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம்.
Mock Test 2022
TET Paper II (Social) : Click here
Online Test Series 2022
TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here
Mega Test Batch
TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now