தமிழக ரயில் பயணிகளுக்கு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே அறிக்கை!

0
தமிழக ரயில் பயணிகளுக்கு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு - தெற்கு ரயில்வே அறிக்கை!
தமிழக ரயில் பயணிகளுக்கு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு - தெற்கு ரயில்வே அறிக்கை!
தமிழக ரயில் பயணிகளுக்கு சேவை குறித்த முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே அறிக்கை!

சென்னையில் மின்சார ரயில் சேவைகளை நம்பி தான் ஏகப்பட்ட மக்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரயில் சேவை மாற்றம்:

சென்னையில் அதிகமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் அதிகம் பேர் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு ஏற்றார் போல காலை முதல் பல ரயில் சேவைகள் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம்-கடற்கரை இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இரவு 10.25 மணிக்கும், 11.25 மணிக்கும் , 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணிக்கும், 11.40 மணிக்கும், 11.59 மணிக்கும் இயக்கப்படும். ஆனால் தற்போது பராமரிப்பு பணி காரணமாக இன்று ( ஜூன் 25) மற்றும் ஜூன் 27 ஆம் தேதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தபால் மூலம் மின்னணு அட்டைகள்!

மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.40 மணி, 11.15 மணி மற்றும் 11.35 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.30 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வருகிற ஜூன் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்த தேதிகளில் வேறு வழியில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here