ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – சேலம் டூ சென்னை நேரம் திடீர் மாற்றம்!

0
ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - சேலம் டூ சென்னை நேரம் திடீர் மாற்றம்!
ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு - சேலம் டூ சென்னை நேரம் திடீர் மாற்றம்!
ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – சேலம் டூ சென்னை நேரம் திடீர் மாற்றம்!

தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியது, தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் இருந்து எழும்பூர் வரை செல்லும் அதிவிரைவு ரயில் புறப்படும் நேரத்தில் தற்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

சேலம் – சென்னை அதிவிரைவு ரயில்:

தமிழகத்தில் தென்னக ரயில்வே சார்பில் பல ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றது. மேலும் இந்த ரயில் பயணம் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்திலும் ரயில்வே துறை தொடர்ந்து தங்களின் பங்கை அளித்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் இந்த சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 7வது ஊதிய குழுவின் பரிந்துரை!

இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் பல்வேறு ரயில்கள் இயங்கி வருகிறது. மேலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் சேலம் மற்றும் சென்னை மக்களை இணைக்கும் வகையிலான அதிவிரைவு ரயில் ஒன்றும் உள்ளது. இந்த ரயில் குறிப்பாக சேலம் – விருத்தாசலம் இடையில் அகல ரயில் பாதை போடப்பட்டதை அடுத்து விரைவு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில் இரவு நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

தேர்வு இல்லாமல் BHEL நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.71,040/-

இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரை செல்லும் அதிவிரைவு ரயிலானது (ரயில் எண் 22154) புதிய ரயில்வே அட்டவணையின் படி, 10 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ரயிலை பகலிலும் இயக்க வேண்டும் என்று வெகு நாளாக பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here