எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!

0
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு - புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு - புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!

வெளியூருக்கு பயணம் செய்யும் பயனாளிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்ற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததுமே மீண்டும் பழையபடி அனைத்து போக்குவரத்து சேவைகளும் துவங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். பேருந்து போக்குவரத்துக்கு ஆகும் செலவை விட ரயில் போக்குவரத்துக்கு ஆகும் செலவு கம்மி என்பதால் பலரும் ரயிலில் தான் செல்ல விரும்புகின்றனர். இந்திய ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளிலும் ரயில்வே நிர்வாகம் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

சமீபத்தில் தான் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் முறையும் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. சென்னை முதல் பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை முதல் கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இந்த மாற்றம் மே 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பின்னுக்கு தள்ளிய கயல் – TRP ரேட்டிங்கில் முதலிடம்!

பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தமாக 2 முன்பதிவு பெட்டிகளும், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தமாக 1 முன்பதிவு பெட்டியும் உள்ளது. இந்த முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்ற உள்ளது. இரண்டு ரயில்களிலும் பெட்டிகள் மாற்றப்பட்ட பிறகு 15 முன்பதிவு பெட்டிகள்,1 ஏசி பெட்டிகள், 13 2-ம் வகுப்பு பெட்டிகள், 5 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 4 பொது 2-ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இறுதியாக 1 2-ம் வகுப்பு லக்கேஜ் பெட்டி போன்ற பேட்டிகள் இடம்பெற்றிருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here