திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு தரிசன நேரம் ஒதுக்கீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் ஆகியோர் சிறப்பு தரிசனம் மூலம் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக இந்த சலுகை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அறிவிப்பு:

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும் கடந்த 2 வருடங்களில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளன. கொரோனா காரணமாக அந்த சேவைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏகாந்தமாக நடைபெற்ற அந்த சேவைகளை மக்கள் ஆன்லைனில் தரிசனம் செய்தனர்.

மின் நுகர்வோருக்கு ஷாக் அறிவிப்பு – வீட்டு உபயோக கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!

தற்போது தொற்று பரவல் கணிசமாக குறைந்து விட்டதால் பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தானம் படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது. இந்த மாதம் நடைபெறும் முக்கியமான சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசன சலுகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணியளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.56900/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ஒரு நாளைக்கு 1000 டோக்கன்கள் வீதம் வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரையும், சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினந்தோறும் ஆயிரம் பக்தர்களுக்கு இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here