தமிழக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 19ம் தேதி பேச்சுப் போட்டி!

0
தமிழக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 19ம் தேதி பேச்சுப் போட்டி!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 19ம் தேதி பேச்சுப் போட்டி!
தமிழக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 19ம் தேதி பேச்சுப் போட்டி!

தமிழகம் முழுவதும் நாளை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அனைவரும் மரியாதை செய்வது வழக்கம் ஆகும். அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வரும் 19ம் தேதி பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் திரும்ப பெறபட்டு உள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அம்பேத்கர் ஜெயந்தி (Ambedkar Jayanti) ஒவ்வொரு ஆண்டும் பாரத் ரத்னா முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1891ஆம் ஆண்டில் ஏப்ரல்14 அன்று தான் பாபா சாகேப் பிறந்தார். அனைத்து இந்திய மாநில மற்றும் நடுவண் அரசு அலுவலகங்களுக்கு இது ஒரு பொது விடுமுறை நாளாகும். இந்நாளில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களாலும் புது டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரது திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இதுநாள்வரை ஒடுக்கப்பட்டு அவரது வழிகாட்டுதலில் புத்த சமயம் புத்த மதத்தைத் தழுவிய மக்கள் உலகெங்கும் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். மேலும் தமிழ் வளா்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவா்களான காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளில் மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் சேலம் மாவட்டத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் பேச்சுப்போட்டி கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 19ம் தேதி பள்ளிக்கான போட்டி காலை 10 மணிக்கும், கல்லூரிக்கான போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெற உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்த பேச்சுப் போட்டியில் கல்லூரி, பள்ளி மாணவா்கள் பங்கு பெற்று, வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாகத் தொகை ரு. 2000 வீதம் வழங்கப்பட உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here