தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் – இனி நேரில் செல்லாமலே பொருட்களை வாங்கலாம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் - இனி நேரில் செல்லாமலே பொருட்களை வாங்கலாம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் - இனி நேரில் செல்லாமலே பொருட்களை வாங்கலாம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ் – இனி நேரில் செல்லாமலே பொருட்களை வாங்கலாம்!

வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத சூழல் உள்ளதால் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் சென்று வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கடைகள்:

மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது. ஆனால் வயதானவர்களை அவ்வாறு நின்று பொருட்களை வாங்க முடியாது.

புதிய வாகனம் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25% தள்ளுபடி – ஒன்றிய அரசு அறிவிப்பு!

எனவே ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாத சிலர் தங்களுக்கு தெரிந்தவர்களை அனுப்பி பொருட்கள் வாங்கி கொள்ள முடியும் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் பலர் புதிய புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்து வருகின்றனர். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpds.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் குடும்ப தலைவர்கள் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகள் இந்த தளத்தில் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

வயதானாவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத சூழல் நிலவி வருவதால் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் tnpds.com என்ற இணையத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். TNPDS இணையதளத்தில் கீழ் பகுதியில் அங்கீகார சான்று என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த விண்ணபத்தில் குடும்ப தலைவரின் பெயர் மற்றும் அட்டை எண், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு எதனால் நேரில் சென்று பொருட்கள் வாங்க முடியாது என்ற காரணத்தையும் குறிப்பிட வேண்டும்.

ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீட்டிப்பு, நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி 9.5% – RBI கணிப்பு!

அதன்பின் யார் சென்று பொருட்கள் வாங்க உள்ளார்கள், அவர் பெயர், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி உங்கள் ரேஷன் கடைக்கான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை கொடுத்தால் அவர்கள் அதனை சரிபார்த்து உங்களுக்கு அனுமதி வழங்கி சான்றிதழ் வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வயதானவர்கள் மற்றும் முதியவர்கள் ரேஷன் கடைக்கு நேரில் செல்லாமலேயே பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!