தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.17 வேலை நாள்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜன.17 வேலை நாள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜன.17 வேலை நாள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.17 வேலை நாள்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் வழக்கமாக வாங்கும் அத்தியாவசிய சேவைகளை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் 17ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பாகவும் உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ரூ.1,17,70,000 ரூபாய் செலவில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, உள்ளிட்ட பொருட்களும் மேலும் கோதுமை மாவு , ரவை, கடலை பருப்பு, புளி உள்ளிட்ட 21 வகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜன.16 ஞாயிறு முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் – அரசு முக்கிய அறிவிப்பு!

கடந்த 4ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன் அடிப்படையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் மட்டும் குடும்ப அட்டைகளை காண்பித்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பரிசுத்தொகுப்புப் விநியோகம் செய்வதால் வழக்கமாக மாதந்தோறும் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நடைபெறவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!!

பொங்கல் பண்டிகை முடிந்து திங்கட்கிழமை ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்று ரேஷன் அட்டைதாரர்களின் நலன் கருதி 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அன்று கார்டுதாரர்கள் அத்தியாவசிய சேவைகளை பெற ஏதுவாக, 17ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயனர்கள் பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here