தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மீண்டும் கைரேகை பதிவு!
தமிழக ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளை (ஜூலை 1) முதல் மீண்டும் இந்த நடைமுறை அமலாகும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஓர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்தாவது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நிவாரண தொகை ரூ.4000 (ரூ.2000+ரூ.2000) மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஜூன் 29 முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் – ஜூலை 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!
இதை பெற ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நேர்சிலை தடுக்கும் வகையில் தாமதமின்றி நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பெற்று செல்வதற்காக கைவிரல் ரேகை பதிப்பு நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த மானுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு – புதிய டிஜிபி சைலேந்திரபாபு!
இதன் காரணமாக கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கொரோனா தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழல் காரணமாகவும் தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா நிவாரண தொகை 98.59% மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99% வரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது – அமைச்சர் விளக்கம்!
இந்த மாதத்திற்கும் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 01.07.2021 அதாவது நாளை முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகை பதிப்பையும் மீண்டும் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.