SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய திட்டம் அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - புதிய திட்டம் அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய திட்டம் அறிமுகம்!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் இருந்து பாதியிலேயே பணத்தை எடுத்துக் கொள்ளும் படியான ஒரு அருமையான திட்டத்தை எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது. மேலும் இத்திட்டம் குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி விட்டன. பொதுவாகவே வங்கிகளின் நிலையான வைப்புத் தொகைக்கான முதிர்வுத் தேதிக்கு முன்பாகவே தொகையை எடுக்க நேரிடும் சமயங்களில் அந்த வங்கிகளிலிருந்து முதலீட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டும் முதிர்வு தேதிக்கு முன்பே தொகையை பெற விரும்பினால் நிலையான வைப்பு தொகைக்கு அபராதம் விதிக்கப் படுவதில்லை. அதில் பாரத ஸ்டேட் வங்கியும் ஒன்றாகும்.

அதாவது எஸ்பிஐ வங்கி மல்டி ஆக்ஷன் டெபாசிட் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலமாக முதலீட்டாளர்கள் அபராதம் செலுத்தாமல் எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளலாம். அதாவது எஸ்பிஐ மல்டி ஆக்ஷன் டெபாசிட் திட்டத்தில் மற்ற நிலையான வைப்புத் திட்டத்தைப் போலவே வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமாக வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பதவிக்காலம் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

Jio வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் திட்டங்கள் – மிக குறைந்த விலையில் அறிமுகம்!

அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே பணத்தை பெற விரும்பினால் எந்த வித அபராதமும் செலுத்தாமல் தொகையை பெற்றுக்கொள்ளலாம். பணம் எடுப்பதில் எந்த ஒரு வரம்பு தடையும் விதிக்கப்படவில்லை. மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூபாய் 1000 மடங்குகளில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், எஸ்பிஐ மல்டி ஆக்ஷன் டெபாசிட் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தங்களது சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கிற்கான சராசரி மாதாந்திர இருப்பை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!