SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
SBI வங்கி:
இந்தியாவில் மிக பெரிய பெருந்துறை வங்கியாக SBI செயல்படுகிறது. இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது.
காஷ்மீர் முதல் தமிழகம் வரை பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான தகவல்கள்!!
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல ஆன்லைன் திருட்டுகள் ஏற்படுகிறது. இதனால் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் SBI வங்கியில் இருந்து பேசுகிறோம் என தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களின் விவரங்களை தெரிந்து கொள்கின்றனர்.
TN Job “FB
Group” Join Now
அதன்பின்னர் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு குறித்த விவரங்களை கேட்டு ஆன்லைன் மூலமாக பண மோசடி செய்துள்ளனர். இது போல பல புகார்கள் வந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் இந்த பண மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் தங்களது வங்கி விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.