தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் இணைப்பை மாற்றலாம்!

0
தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு - இனி ஆன்லைனில் இணைப்பை மாற்றலாம்!
தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு - இனி ஆன்லைனில் இணைப்பை மாற்றலாம்!

தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் இணைப்பை மாற்றலாம்!

தமிழகத்தை பொறுத்த வரையில் தாழ்வழுத்த மின் இணைப்பில் வீடு, தொழில், மற்றும் வணிகம் என ஒவ்வொன்றுக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒருவேளை மின் இணைப்பில் விலைப்பட்டியலை மாற்ற விரும்புவோர் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தற்போது இணையத்தில் மாற்றி விடலாம் என்று அறிவித்து உள்ளனர்.

மின்வாரியம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்த நிலையில் தற்போது தாழ் அழுத்த மின் இணைப்பைப் பொறுத்தவரையில் தமிழக மக்கள் விலைப்பட்டியலில் மாற்றம் செய்ய நேரடியாகச் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், இனி இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்றவற்றை செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைய முகப்பு விண்ணப்பத்தை சமர்பிக்க நிர்வாகத்தின் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அதனை தொடர்ந்து மின் சேவை விற்பனை, பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, பரிசு வழங்குதல், உரிமையாளர் இறப்பு ஆகிய காரணங்களுக்காக மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் விவரங்கள், இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான ஆவணங்கள், சம்பந்தப்பட்ட பயனாளியின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மாற்றப்பட வேண்டியவர் பெயர், போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களில் ஏதாவது தவறு இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் 7 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சலுகைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!