PM Kisan திட்ட பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ் – புதிய விதிமுறைகள் அறிமுகம்!

0
PM Kisan திட்ட பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ் - புதிய விதிமுறைகள் அறிமுகம்!
PM Kisan திட்ட பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ் – புதிய விதிமுறைகள் அறிமுகம்!

மத்திய அரசு, பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் புதிய விதியை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி புதிய விதியின் கீழ், விவசாயிகள் ஆதார் எண்ணிலிருந்து நிலையைப் பார்க்க முடியாது, ஆனால் மொபைல் எண்ணிலிருந்தே பார்க்க முடியும் என்பது தான் புதிய விதி ஆகும்.

புதிய விதிகள்:

நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரதமர் கிசான் திட்டத்தை அறிமுகம் செய்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், ஆண்டுக்கு ரூ.6,000 அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும் இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும். பி.எம். கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக 3000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – சிட்கோ நிறுவனம் அறிவிப்பு!

இதுவரை இந்த திட்டத்தில் 11 தவணை பணம் விவசாயிகள் கணக்கில் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில் அரசாங்கம், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில், ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றம் 12 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட விவசாயிகளை பாதிக்கும் என தகவல்கள் கூறுகின்றன. அதாவது ஒரு விவசாயி போர்ட்டலுக்குச் சென்று ஆதார் எண்ணிலிருந்து தனது நிலையைச் சரிபார்க்க முடியாது. தற்போது விவசாயிகள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விவசாயிகள் தங்கள் ஆதார் அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு தங்கள் ஸ்டேட்டஸை சரிபார்க்கும் விதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செயல்முறை:

  • இதற்கு நீங்கள் முதலில் pmkisan.gov.in க்குச் செல்ல வேண்டும்.
  • இடதுபுறத்தில் உள்ள சிறிய பெட்டியில் பயனாளியின் நிலையைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் முன் ஒரு பக்கம் திறக்கும்.
  • இங்கே உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டு உங்கள் நிலையை சரிபார்க்கவும்.
  • உங்கள் பதிவு எண் தெரியவில்லை என்றால், உங்கள் பதிவு எண்ணை தெரிந்து கொள்ளுங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

  • இப்போது உங்கள் பிரதமர் கிசான் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை இதில் உள்ளிடவும்.
  • இதற்குப் பிறகு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, மொபைல் ஓடிபி பெறவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • கொடுக்கப்பட்ட பெட்டியில் உங்கள் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி ஐ உள்ளிட்டு விவரங்களைப் பெறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் பதிவு எண் மற்றும் பெயர் உங்கள் முன் தென்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!