அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வாழ்நாள் சான்றிதழ் பற்றிய அறிவிப்பு!

0
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - வாழ்நாள் சான்றிதழ் பற்றிய அறிவிப்பு!
அனைத்து ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வாழ்நாள் சான்றிதழ் பற்றிய அறிவிப்பு!

மாநில அரசுத்துறையில் பணிபுரிந்து இப்போது ஓய்வூதியம் பெற்று வரும் ஒவ்வொரு நபரும் தங்களது வாழ்நாள் சான்றிதழை தபால்காரர் மூலமாக சமர்ப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வாழ்நாள் சான்றிதழ்

மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சலுகைகளில் ஒன்று ஓய்வூதியம். அதாவது, அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்கும் முயற்சியில் அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியத்தை பெற வேண்டும் என்றால் ஊழியர்கள் ஆண்டு தோறும் தங்களது வாழ்நாள் சான்றிதழை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ், ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாகும்.

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை – மாதம் ரூ.2,90,000 ஊதியம்..!

இந்த நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை தபால்காரர் மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான ஓய்வூதியத்தை பெற தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ்களை தபால்காரர் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் ஒவ்வொரு தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை தபால் நிலையங்களுக்கு சென்று சமர்பிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு ‘ஜீவன் பிரமான்’ திட்டத்தில் போஸ்டல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உதவியுடன் பயோ மெட்ரிக் முறையிலும் இந்த வாழ்நாள் சான்றிதழை வீட்டில் இருந்தே செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். மேலும் இந்த செயல்முறைக்காக ஆதார் அட்டை, தொலைபேசி எண், பென்ஷன் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களுடன் கைவிரல் ரேகை அவசியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here