தற்காலிக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 ஆக உயர்வு – முதல்வர் உத்தரவு!

0
தற்காலிக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 ஆக உயர்வு - முதல்வர் உத்தரவு!
தற்காலிக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 ஆக உயர்வு – முதல்வர் உத்தரவு!

புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கான ஊதியம் தற்போது ரூ.15,000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஊதிய உயர்வு:

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கும் சிறப்பு பொருட்கள் வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசியை இலவசமாக தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கடைகள் இயங்குவதை உறுதி செய்யவும், கடைகளின் பட்டியல் விவரங்களை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக பள்ளிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முக்கிய அறிவிப்பு!

கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மக்கள் மிகவும் பொருளாதர நெருக்கடியில் இருந்து வருகின்றனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன் எதிரொலியாக தீபாவளி சிறப்பு அறிவிப்பினால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் புதுவை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப கோரிக்கை!

இந்நிலையில், புதுவை அரசின் தற்காலிக பணியாளர்களுக்கு முன்னதாக மாத ஊதியமாக ரூ.7,000 வழங்கப்பட்டு வந்தது. இதனை உயர்த்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். தற்காலிக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அவர்களின் மாத ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை அரசின் இந்த அறிவிப்பினால் தற்காலிக ஊழியர்கள் அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here