பாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியீடு!

0
பாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியீடு!
பாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியீடு!
பாஸ்டேக் (FASTag) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலைத்துறை வெளியீடு!

தேசிய நெஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடப்பதற்கு பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக பாஸ்டேக் அட்டை வழங்குவதாக கூறி பணம் பறிக்கும் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாஸ்டேக்:

நாட்டில் உள்ள தேசிய நெஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணத்தை மின்னணு முறையில் மாற்றும் வகையில் ‘பாஸ்டேக்’ முறை கடந்த 2016ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு பல முறை வாகன ஓட்டிகளுக்கு கால அவகாசம் வழங்கி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!!

இதனால் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் நெடுநேரம் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாஸ்டேக் பயன்படுத்தாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கும் வகையில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாஸ்டேக் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் பதிவு மேற்கொள்ளலாம் என்று கூறி போலியான வலைத்தளம் மூலம் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் மக்கள் யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க 1033 என்ற அவசர கட்டுப்பாட்டு அறைக்கும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!