தொழிற்கல்வி படிப்புகள் வழங்கும் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் எண்ணற்ற தொழிற்கல்வி படிப்புகள் வழங்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தற்போது அங்கீகாரம் இன்றி தொழில் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஐசிடிஇ கூறியுள்ளது.
ஏஐசிடிஇ அறிவிப்பு:
நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை போல தொழிற்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நிறுவனங்களிடையே இருக்கும் போட்டியின் காரணமாக தொழிற்கல்வி நடத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் சேர்க்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி – பள்ளிகளை மூட வாய்ப்பு?
தற்போது பல நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லாது. எனவே முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களை தேடும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அங்கீகாரம் இல்லாமல் தொழில் படிப்புகளை நடத்தும் கல்லூரிகளை கண்டறிந்து தவறு நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சூட்டிங் முடிந்தும் பைக்கில் சுற்றும் தல அஜித் – வைரலாகும் புகைப்படங்கள்!
இது குறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இளநிலை, முதுநிலை, பட்டய, சான்றிதழ், இணையவழி உட்பட அனைத்து வித தொழிற்படிப்புகளுக்கும் உரிய காலத்தில் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றிருப்பது அவசியம். அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பு அந்த படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களின் பட்டியல் https://www.aicte-india.org/ என்ற இணையத்தில் பதிவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.