மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

மத்திய அரசு, அரசு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, தனியார் நிறுவன செயலி மூலம் ஏற்படும் பாதிப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என்று உத்தரவு அளித்துள்ளது.

அதிரடி உத்தரவு:

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்திற்கு சென்று உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதித்த காலகட்டத்தில் அனைத்து தொழிற் துறைகளும் முடக்கப்பட்டது, இருப்பினும் சில துறை பணியாளர்கள் work from home பார்த்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் டிஜிட்டல் மையமாக மாறி கொண்டே வருகிறது. இன்றைய நிலையில், ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி, ஸ்மார்ட் போன்களை, அதுவும் ஆண்ட்ராய்டு சிஸ்டத்தில் இயங்கும் போன்களை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தேவையினை இன்றியமையாததாக எண்ணி, அதற்காக ஆண்ட்ராய்டு இயங்கும் ஸ்மார்ட் போனை நாடுகின்றனர்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – திருப்புதல் தேர்வு விடைத்தாள் திருத்தம்!

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளது. இந்த செயலிகள் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வருகிறோம். இருப்பினும் தனிநபரின் பாதுகாப்புக்கு பாதிப்பு வருவதால் ஒரு சில தனியார் நிறுவனங்களின் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பாதுகாப்பு இல்லாத செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் மற்றும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகிறது.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் முக்கியமான ஆவணங்கள் மற்றும் ரகசியமான ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!