தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொதுத்தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொதுத்தேர்வு முடிவுகள் தேதி வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்நிலையில் ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகம் மூன்று கொரோனா அலைகளை சந்தித்து உள்ளது , 3வது அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியதால், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது இதன்படி, தமிழகம், புதுச்சேரியில் நேற்று 12ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். முதல் நாளான நேற்று தமிழ்ப்பாட தேர்வை மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர். இதற்கிடையில் தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் இன்று 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை சிறப்பு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஓய்வூதியத் தொகை ரூ.1.25 லட்சம் வரை உயர்வு!

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை. மேலும் ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி, அன்று 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தொடங்கும். தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி முதல் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 23-ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதையடுத்து 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7ம் தேதி மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!