10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 இல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜூன் 15 இல் தேர்வு முடிவுகள் வெளியீடு!
10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஜூன் 15 இல் தேர்வு முடிவுகள் வெளியீடு!
10ம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 இல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கேரளா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு வரும் ஜூன் 15 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. மேலும் தேர்வு முடிவுகளை எந்த பக்கத்திற்கு சென்று பார்ப்பது பற்றிய முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

அனைத்து மாநிலங்களிலுமே பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் மே 5 ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைத்த காரணத்தினால் மாணவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் இந்தாண்டு பொதுத்தேர்வினை எழுதினர். இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? இதுவரை அறியாத பல தகவல்கள்!

அந்த வகையில் கேரளா மாநிலத்திலும் மார்ச் 31 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. மேலும் 4.26 லட்ச மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர். பொதுத்தேர்வின் போதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காரணத்தினால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாஸ்க் அணிந்தபடி மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், கேரளா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 15 ஆம் தேதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார்.

மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் keralaresults.nic.in, keralapareekshabhavan.in என்கிற இணையதள முகவரி பக்கத்தில் சென்று தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் இந்த இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று Kerala SSLC Result 2022 என்கிற பகுதியை கிளிக் செய்து தேர்வு எண்ணையும் பதிவு செய்துவிட்டால் தேர்வு முடிவுகளை பார்த்துவிடலாம். பின்னர் இந்த மதிப்பெண் பட்டியலை விருப்பத்தின் பேரில் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!