TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள அலுவலர் கிரேடு 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு அதிகம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களில் அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்பும் பொருட்டு அரசு குரூப் 2,2A தேர்வை அறிவித்தது. திட்டமிட்டபடி தேர்வு கடந்த மே 21ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக கிராம நிர்வாக உதவியாளர், தட்டச்சு பணி, நில வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

அதில் நிர்வாக அலுவலர் கிரேடு 4 பதவியில் 36 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் பட்டியலினத்தவர், SC, SC, DNC, MBC போன்ற பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர்கள் http://www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஜூன் 11ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!

SC, SC DNC, MBC உள்ளிட்ட பிரிவினர் மற்றும் விதவைகளுக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு 2 தாள்களாக நடைபெறும். அதில் முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு இரண்டாம் பிரிவில், பொது அறிவு பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். இந்த எழுத்து தேர்வானது ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!