தமிழக மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு – மருத்துவத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு - மருத்துவத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!!
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு - மருத்துவத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!!
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு – மருத்துவத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் வராமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ஒரு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

ஓமைக்ரான் பரவல்

தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. அத்துடன் கொரோனா நோய் பரவலின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. அத்துடன் குறைந்த நாட்களில் அதிக நாடுகளில் ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசு முக்கிய உத்தரவு!

இந்தியாவிலும் ஓமைக்ரான் பரவல் ஏற்படாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் இந்தியாவிலும் தற்போது ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்த குஜராத், மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலத்திற்கும் பரவ தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஓமைக்காரன் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன் தற்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடைமுறையில் இருப்பது மிகவும் ஆபத்தானது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கதிருடன் இணைந்த கண்ணன்!

அதனால் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது, “தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஓமைக்ரான் பரவல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் அதனை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!