
அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – MS, Ph.D படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் M.S., மற்றும் Ph.D., படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அறிவிப்புகளை பல்கலை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்கும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை:
தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று தாக்குதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. ஆனால் அப்போதும் கூட ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து தொற்று நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர் மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு திட்டமிட்டிருந்த படியே செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுக்கான தேதிகள் மற்றும் கல்வியாண்டு தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு மார்ச் 16ம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட உள்ளது. இந்த செமஸ்டருக்கான பாடங்கள் ஜூன் 16ம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Office இல் சேமிப்பு அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இதற்கான செய்முறை தேர்வுகள் ஜூன் 18ம் தேதி தொடங்கும் என்றும் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 28ம் தேதியுடனும் முடிய உள்ளது. அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அண்ணா பல்கலைகழகத்தின் M.S., மற்றும் Ph.D. படிப்புகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை https://cfr.annauniv.edu என்ற அதிகாரபூர்வ இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 4 வளாக கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, வீட்டு வாடகைப் படியுடன் சேர்த்து ரூ.31,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.