தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முக்கிய எச்சரிக்கை – அறிவிப்பு வெளியீடு!

1
தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முக்கிய எச்சரிக்கை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முக்கிய எச்சரிக்கை - அறிவிப்பு வெளியீடு!தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முக்கிய எச்சரிக்கை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கான முக்கிய எச்சரிக்கை – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில், பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய அறிவிப்பு:

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் ஆணைய தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் படி சில குழந்தைகள் படிப்பில் இருந்து திசை திருப்பப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர். மேலும் சில குழந்தைகள் தவறான நடத்தை / குறும்பு செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சில நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

தமிழ் மொழி மேம்படுத்த சிறப்பு திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!

ஒரு குழந்தை சரியாக படிக்காமல் இருந்தால் முதலில் சரியான கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கற்றலில் குறைபாடிருக்கும் குழந்தை என அடையாளம் காணப்பட்டால் தலைமையாரியர் குழந்தையை சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும். கற்றலில் குறைபாடில்லாத குழந்தை என்றால் பள்ளி ஆலோசகர் குழந்தையின் படிப்பிற்கு தேவையான ஆசோசனைகளை வழங்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

ஒரு குழந்தை பள்ளி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் / பாதுகாவலர் மாற்றி அமைத்துத்தர வேண்டும். மேலும் பொது போக்குவரத்தில் தொங்கி கொண்டே பயணம் செய்தல் , ஆசிரியர்களை அவமதித்தல், மற்ற குழந்தைகளை அடித்தல், புகைபிடித்தல், ஆசிரியர்களை அச்சுறுத்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்ஸ் செய்தால் பள்ளி ஆலோசகர் முதன் முதலில் தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டும். மேலும் 2 வது 3வது முறை செய்தால் ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.

ஒழுங்குமுறை நுட்பங்கள்:

  • ஐந்து திருகுறள்களை படித்து பொருளோடு ஆசிரியரிடம் எழுதி காட்ட வேண்டும்.
  • இரண்டு நீதிக்கதைகளை பெற்றோர்களிடம் கற்று வகுப்பறையில் சொல்ல வேண்டும்
  • 5 வரலாற்று தலைவர்களை பற்றி அறிந்து கொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும். ;
  • நல்ல பழக்கவழக்கங்கள் பற்றி வரைபடம் எழுத வேண்டும்.
  • மாணவர்கள் தவறை திருத்தி கொள்ள ஒரு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here