G pay பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை – அறிவிப்பு வெளியீடு!

0
G pay பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை - அறிவிப்பு வெளியீடு!
G pay பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை - அறிவிப்பு வெளியீடு!G pay பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை - அறிவிப்பு வெளியீடு!
G pay பயனர்களுக்கான முக்கிய எச்சரிக்கை – அறிவிப்பு வெளியீடு!

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரும்பாலும் மக்கள் இணையதளம் வாயிலாக பண பரிமாற்றங்களை செய்து வருகின்றனர். இதில் எந்த அளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவு மோசடிகளும் நடைபெறும். இந்த நிலையில் G PAY யூசர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து மக்கள் தொற்று பரவும் அச்சத்தால் பொது இடங்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். அதனால் முடிந்த அளவு அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாக செய்து வருகின்றனர். குறிப்பாக பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. தற்போது பண பரிமாற்றத்திற்கு பல்வேறு மொபைல் செயலிகள் வந்து விட்டது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பணத்தை எளிதாக மாற்றுகின்றனர். இதனால் மக்களுக்கு நேரமும், அலைச்சலும் மிச்சமாகிறது.

Exams Daily Mobile App Download

மறுபுறம் இந்த செயலிகள் மூலம் பல பண கையாடல் மோசடிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் போது பலர் மொபைல் எண்ணை தான் பயன்படுத்துகிறார்கள். அதில் நாம் ஒரு எண்ணை தவறாக உள்ளிட்டாலும் பணம் பறிபோய் விடும். மேலும் மோசடி செய்யும் நபர்கள் மொபைல் எண்ணை அறிந்து அதில் உங்களின் வங்கி கணக்கு சார்ந்த விவரங்களை அறிந்து பணத்தை கையாடல் செய்து விடுகின்றனர். அதனால் பயனர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுவது அவசியம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 14) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் Google Pay தனது யூசர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நீங்கள் டென்ஷன் ஆக இருக்கும் போது அல்லது போன் பேசிக்கொண்டே எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் செய்யாதீர்கள். கவனக்குறைவாக நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்ப நேரிடலாம். மேலும் உங்கள் Google Pay அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்ய வழிவகுக்கும் OTP-ஐ ரகசியமாக வைத்து கொள்வது அவசியம். முக்கியமாக, நீங்கள் பண பரிவர்த்தனை செய்யும் போது ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை மறந்தும் பயன்படுத்த வேண்டாம். Google Pay வில் ஏதேனும் பிரச்னை என்றால் எப்போதும் கூகுள் பே ஆப்பில் உள்ள Help / Support செக்ஷனை மட்டுமே அணுகவும். இன்டர்நெட்டில் கிடைக்கும் நம்பகமற்ற எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!