அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

0
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பல அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது முதலான சில அம்சங்கள் இடம்பெற்றது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்திவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும்படி கேட்ட பிறகும் கூட அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம் அமல்!

தற்போது கூட பழைய ஓய்வூதிய திட்டம் முதலான 12 கோரிக்கைகளை முன்னிறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன், தூய்மை காவலர் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல் – வாகன ஓட்டிகளுக்கு ஷாக் அறிவிப்பு!

ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள், டாஸ்மாக், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் முதலான பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here