மாநில கல்லூரிகளில் 2024 முதல் 4 ஆண்டு இளங்நிலை படிப்பு அமல் – முதல்வர் அறிவிப்பு!

0
மாநில கல்லூரிகளில் 2024 முதல் 4 ஆண்டு இளங்நிலை படிப்பு அமல் - முதல்வர் அறிவிப்பு!
மாநில கல்லூரிகளில் 2024 முதல் 4 ஆண்டு இளங்நிலை படிப்பு அமல் - முதல்வர் அறிவிப்பு!
மாநில கல்லூரிகளில் 2024 முதல் 4 ஆண்டு இளங்நிலை படிப்பு அமல் – முதல்வர் அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் உள்ள சோனாரி கல்லூரியில் நேற்று பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் 4 ஆண்டு இளநிலை படிப்புகள் குறித்து பேசினார்.

இளநிலை படிப்புகள்:

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை திருத்தம் செய்யப்பட்டு புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. பள்ளியில் கற்றல் இடைநிற்றலில் இருந்து வெளியே சென்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து பயில வைப்பது புதிய கல்வி கொள்கையின் நோக்கமாகும். மேலும் இளைஞர்களும், பதின்பருவத்தினரும் 100% கல்வியறிவு பெறுவதை இலக்காக கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எம்.ஃபில் (M.phil) படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 4 ஆண்டு இளங்கலை பட்டபடிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் நான்காண்டு இளங்கலை படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் சாரிடியோ மாவட்டத்தில் உள்ள சோனாரி கல்லூரியின் பொன்விழா ஆண்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு அறிவு மற்றும் ஞானத்தை அளித்து முழு மனிதர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 12) 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Exams Daily Mobile App Download

இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநிலக் கல்லூரிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் முன்னேற்றத்தில் நாமும் ஒரு பங்குதாரர்களாக மாறும் வகையில் மாணவர் சமுதாயம் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த 4 ஆண்டுகால இளநிலை படிப்பை முடித்த மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நேரடியாக PhD படிப்பில் சேரலாம். மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இந்த 4 ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!