விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் இமான் அண்ணாச்சி – வெளியான தகவல்!!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ்" நிகழ்ச்சியில் களமிறங்கும் இமான் அண்ணாச்சி - வெளியான தகவல்!!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் இமான் அண்ணாச்சி – வெளியான தகவல்!!

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக தமிழில் முதன் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி 4 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் இருந்த போதிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ மற்றும் டீசர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் பிரியங்கா, ஜி.பி முத்து, திருநங்கை நமீதா, நடிகை ஷகிலாவின் மகள் மிளா, பிரியா ராமன், நடிகை பவானி ரெட்டி, சூசன் ஜார்ஜ் ஆகியோர் பெயர்கள் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்ற லிஸ்ட் வந்து கொண்டே தான் உள்ளது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்ஸ்!!

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக விஜய் டிவி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அதன் பின்னர் உறுதியான தகவல் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!