இளைய தளபதி விஜயின் பீஸ்ட் பட ட்ரைலர் லீக் ஆனதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
இளைய தளபதி விஜயின் பீஸ்ட் பட ட்ரைலர் லீக் ஆனதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இளைய தளபதி விஜயின் பீஸ்ட் பட ட்ரைலர் லீக் ஆனதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இளைய தளபதி விஜயின் பீஸ்ட் பட ட்ரைலர் லீக் ஆனதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பீஸ்ட் படம் வெளிவரவிருக்கும் நிலையில் பீஸ்ட் பட குழுவினர்கள் அதிகாரபூர்வமாக ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று வெளியாகும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது அதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

பீஸ்ட் ட்ரைலர்:

உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்ட நடிகர் இளைய தளபதி விஜய் தமிழ் சினிமா துறைக்கு சின்ன வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை மக்கள் மனதில் மாஸ் ஹீரோவாக, வீட்டில் ஒருவராக குடியிருந்து வருகிறார். தளபதி படம் என்றாலே பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ தான். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. தளபதி 65 வது படமான இந்த படத்துக்கு ” பீஸ்ட் ” என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகளையும், பல எதிர்பார்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் அரபிக் குத்து பாடல் காதலர் தினம் அன்று வெளியாகியிருந்தது.

பாக்கியாவை படத்திற்கு கூப்பிடும் எழில், கோபியை வர வேண்டாம் என எச்சரிக்கை – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம்!

இந்த அரபிக் குத்து பாடலை விழா போன்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில் மக்களின் இளைய தளபதி விஜய் அவர்களே பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. அதில் ரசிகர்கள் கண்ணே படும் அளவுக்கு விஜய் அவர்கள் வேற லெவல் காஸ்டியூம் அணிந்து மாஸ் காட்டியுள்ளார். பாடலை கேட்ட ரசிகர்கள் குஷியோ குஷி ஆகி உள்ளார்கள். மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்து ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான காத்திருப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் நடைபெறும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறாததால் தளபதியின் மேடைப் பேச்சை ரசிகர்கள் மிஸ் பண்ணுவதாக சோகத்தை தெரிவித்தார்கள்.

குழந்தை வரம் கேட்டு பரிகாரம் செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

அந்த சோகத்தை தீர்க்கும் விதமாக பட குழுவினர் புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். அதை குறித்து நினைத்திருக்கையில் திடீரென படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று வெளிவரும் என முன்னதாக அறிவிருந்திருந்ததில் திடீரென குழப்பம் உண்டாகியுள்ளது. அதாவது பைரவா மற்றும் குர்கா பட காட்சிகளை வைத்து எடிட் செய்து பீஸ்ட் படத்தின் ட்ரைலர் லீக்கானது போல் ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய தேவையில்லை. பீஸ்ட் ட்ரைலர் சொன்னது போல இன்று மாலை 6 மணிக்கு செம மாஸ் ஆக்ஷன் போஸ்டருடன் வெளியாகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!