ரூ.31,000/- ஊதியத்தில் IIITDM நிறுவன வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0

ரூ.31,000/- ஊதியத்தில் IIITDM நிறுவன வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (IIITDM Kancheepuram) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (IIITDM Kancheepuram) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, IT, Data Science, AI ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் M.E, M.Tech Degree தேர்ச்சி பெற்றவராக அல்லது Computer Science, IT, Data Science, AI ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech Degree மற்றும் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 வயது என IIITDM நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.31,000/- ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here