ஜூலை 1 முதல் இந்த வங்கிகளின் IFSC, செக்புக் செல்லாது – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் பல சிறிய வங்கிகள் நிதி நெருக்கடி காரணமாக பெரிய வங்கிகளுடன் இணைந்துள்ளது. இதன் காரணமாக இணைக்கப்பட்ட வங்கிகளின் IFSC, MICR, செக் புக் ஆகியவை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் மாற்றம்:
இந்தியாவில் பெரும்பாலுமான சிறிய வங்கிகள் தற்போது கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு வங்கிகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல சிறிய வங்கிகள் இதர பெரிய வங்கிகளுடன் இணைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிண்டிகேட் மற்றும் கனரா வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது தொடர்பாக கனரா வங்கி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
அதன்படி சிண்டிகேட் வங்கியின் IFSC code வரும் ஜூலை 1 முதல் இயங்காது என்று தெரிவித்துள்ளது. எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30க்குள் தங்கள் வங்கி கணக்கில் IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஜூலை 1 முதல் SYNB என்ற அனைத்து IFSC குறியீடுகளும் முடக்கப்பட்டு அதற்கு மாறாக CNRB என தொடங்கும் IFSC குறியீடுகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இல்லையெனில் https://canarabank.com/IFSC.html என்ற இணையதளம் அல்லது 1800 4250 018 என்ற என் மூலம் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய IFSC குறியீடை தெரிந்து கொள்ளலாம். இது தவிர சிண்டிகேட் வங்கியின் ஸ்விப்ட் கோடு, செக் புக் என அனைத்தும் செயல்படாது என்றும் எனவே இதனையும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே ஜூலை 1ம் தேதிக்கு பின் வங்கிகளில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.