ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!

0
ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!
ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!
ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – MS Office தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனத்தில் (ICSIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sr. Supervisor, Assistant Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

ICSIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனத்தில் (ICSIL) Sr. Supervisor, Assistant Manager பணிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தமாக 02 இடங்கள் காலியாக உள்ளன. Sr. Supervisor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree, Diploma Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech அல்லது ஏதேனும் ஒரு Graduation Degree மற்றும் Material management, Procurement, Supply Chain Management பாடப்பிரிவில் PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.Sr. Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MS Office தெரிந்தவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

TNPSC Coaching Center Join Now

இப்பணிகளுக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் அல்லது அதற்கு சமமான ஊதிய அளவுகளின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Sr. Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் Manpower Handling, Personnel, Staff Welfare, Recruitment, Training போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் 10 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் Contract Management, Procurement, Materials Management, Supply Chain Management போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் 12 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Sr. Supervisor பணிக்கு ரூ.25,000/- மற்றும் Assistant Manager பணிக்கு ரூ.30,000/- என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ஊதியம் அளிக்கப்படும். இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 24.05.2022 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

ICSIL Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!