ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு !
ஜனவரி மாதத்திற்குள் இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சிலின் கீழ் செயல்படும் பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஊரடங்கு உத்தரவு !
நாடு முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
TN Police “FB
Group” Join Now
பள்ளிகளை திறக்க வேண்டும் !!
இந்தியாவில் பல்வேறு கல்வி வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மத்திய அரசின் கீழ் இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. தற்போது அக்கவுன்சிலின் இயக்குநர் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளார். அதில், இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்திலும் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதிக்குள் திறக்க வேண்டும் எனவும், தற்போது ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், புராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களிடம் மாணவர்கள் நேரடியாக கேள்வி கேட்டு விளக்கங்களை பெற்றால் தான் அவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் என்பதனால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |