மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

11.04.2022 அன்று திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் (ICMR – VCRC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. Project Technician பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். நாளை (24.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ICMR-VCRC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் (ICMR – VCRC) வெளியிட்ட அறிவிப்பில் Project Technician (III) பணிக்கு 2 பணியிடங்கள் மற்றும் Project Technician (II) பணிக்கு 2 பணியிடங்கள் என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ExamsDaily Mobile App Download
  • Project Technician (III) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டு Diploma in Medical Laboratory Technology (DMLT) படித்தவராக இருக்க வேண்டும்.
  • Project Technician (II) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Project Technician (II, III) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Sc. (MLT/Life Sciences) முடித்திருந்தால் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக கருதப்படும்.
  • Project Technician II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது எனவும் Project Technician III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • Project Technician (II) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.17,000/- மற்றும் Project Technician (III) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ICMR-VCRC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (24.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ICMR-VCRC Notification Link

ICMR-VCRC Application Link

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here