36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – எச்சரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!

0
36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – எச்சரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!
36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – எச்சரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!

36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – எச்சரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதித்த 36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தனது ஆய்வு முடிவில் ICMR தெரிவித்து உள்ளது. இதில் தமிழகத்தின் 5 மாவட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) அறிக்கை:

இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை இருந்த கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த ICMR பல அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அவை,

இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்

 1. கொரோனா வைரஸ் பாதித்த மொத்தம் 5,911 பேரில் 104 பேர் (1.8 சதவீதம்) கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 40 சதவீதம்பேர் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாதவர்கள். எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளாதவர்கள்.
  பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழகத்தின் 5 மாவட்டங்கள் உள்பட 15 மாநிலங்களின்
 2. 36 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மற்றவர் மாநிலங்களில் மராட்டியம் (8), மேற்கு வங்காளம் (6), டெல்லி (5) முக்கியமானவை.
 3. 2 சதவீதம்பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 1 சதவீதம்பேர் கொரோனா பாதித்த நாட்டுக்கு சென்று வந்தவர்கள் என கூறுகிறது ஆய்வு முடிவுகள்.
 4. கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி வரையில், கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை.
 5. மார்ச் மாதம் 14-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையில் கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2.6 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 6. அதாவது, மார்ச் 14-ந் தேதி வரை கடுமையான சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என்று இருந்த நிலை, அதன்பின்னர் மாறி 2.6 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
 7. கொரோனா வைரஸ் தொற்று பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது.
 8. கடுமையான சுவாச தொற்று நோய் பாதித்து, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை கொண்டுள்ள 36 மாவட்டங்கள் மீது கடுமையான கவனம் செலுத்த வேண்டும். இந்த மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
 9. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து முழு விபரங்களை அறிந்து அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
5 நகரங்களுக்கு ரெட் அலர்ட்.! மத்திய அரசு அதிரடி.!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here