ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.1,77,500/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.1,77,500/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ரூ.1,77,500/- ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Accounts Officer மற்றும் Junior Accounts Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,77,500/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Accounts Officer, Junior Accounts Officer
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

Accounts Officer பணிக்கு என 12 பணியிடங்களும், Junior Accounts Officer பணிக்கு என 01 பணியிடமும் ICMR நிறுவனத்தில் காலியாக உள்ளது.

ACO / Jr. ACO தகுதிகள்:

Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் Budget, Finance, Accounts போன்ற பணி சார்ந்த துறைகளில் Level – 07, 08 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Section Officer பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Flipkart நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Junior Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் Budget, Finance, Accounts போன்ற பணி சார்ந்த துறைகளில் Level – 06, 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Assistant பதவிகளில் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராகவும் B.Com பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

ACO / Jr. ACO வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

ACO / Jr. ACO சம்பளம்:

Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

Junior Accounts Officer பணிக்கு  தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICMR தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மற்றும் Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ICMR நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (28.02.2023) கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!