ICICI வங்கி சேவை கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் மாற்றம் – 10 முக்கிய தகவல்கள்!
அடுத்த மாதம் முதல் தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. அது தொடர்பாக வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி காண்போம்.
ஐசிஐசிஐ வங்கி:
தனியார் துறை வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ தனது வங்கியின் உள்நாட்டு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிமாற்றங்கள் மற்றும் காசோலை கட்டணங்கள் போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. வங்கி நிர்வாகம் தனது இணையத்தளத்தில் இது குறித்து அறிவித்துள்ளது. மாற்றப்பட்டுள்ள சேவை கட்டணங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
முன்னதாக இந்த மாதத்தில் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வங்கிகளின் சேவை கட்டணத்தை உயர்திக் கொள்ள அனுமதி அளிப்பதாக அறிவிடத்த்து. பிற வங்கிகளின் ATM மையத்தில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பெரு நகரங்களில் மூன்று முறையும், மற்ற நகரங்களில் ஐந்து முறையும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கு மேல் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ரூ.21 ஆக அதிகரித்துக் கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
முக்கிய விஷயங்கள்:
- ஆறு மெட்ரோ நகரங்களில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் முதல் மூன்று பரிவர்த்தனைகளை மட்டுமே ஒரு மாதத்திற்கு இலவசமாக பெறுவார்கள்.
- மற்ற எல்லா இடங்களிலும், முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும்.
- வங்கி ஒரு நிதி பரிவர்த்தனைக்கு ரூ.20 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.50 வசூலிக்க்கப்படும்.
- ஐசிஐசிஐ வங்கி மாதத்திற்கு மொத்தம் நான்கு இலவச பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது.
- வங்கி அறிவிப்பின்படி, ரூ.150 க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
TN Job “FB
Group” Join Now
- ஆகஸ்ட் 1 முதல், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் தொகை வரம்பு மாதத்திற்கு ரூ.10,000 ஆகும். அதற்கு மேல் ஒவ்வொரு 10,000 ரூபாய்க்கும் 1,000க்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
- வெளிநாடுகளுக்கு உங்கள் வங்கிக் கணக்கில் மூலம் பணம் அனுப்ப ஒரு நாளைக்கு ரூ.25,000ம் இலவசமாக அனுமதிக்கப்படும். அதற்கு மேல் ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும்.
- வணிக பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.25,000 வரை இலவசமாக அனுமதிக்கப்படும். அதற்கு மேல் உள்ள தொகைக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும்.
- வருடத்திற்கு 25 காசோலைகள் இலவசமாக வழங்கப்படும். அதற்கு மேல், கூடுதல் காசோலை புத்தகம் வழங்க ரூ.20 வசூலிக்கப்படும்.
- மாதத்தின் முதல் நான்கு பரிவர்த்தனைகள் இலவசம். அதற்கு மேல், ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.15 வரை மட்டுமே வசூலிக்கப்படும்.