ICICI வங்கியின் FD வட்டி விகிதங்களில் உயர்வு – தகவல் வெளியீடு!

0
ICICI வங்கியின் FD வட்டி விகிதங்களில் உயர்வு - தகவல் வெளியீடு!
ICICI வங்கியின் FD வட்டி விகிதங்களில் உயர்வு - தகவல் வெளியீடு!
ICICI வங்கியின் FD வட்டி விகிதங்களில் உயர்வு – தகவல் வெளியீடு!

இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ICICI கடந்த 6 நாட்களில் இரண்டு முறை என்ற அளவில் தனது வாடிக்கையாளர்களின் நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளது.

வட்டி விகிதங்கள்

கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு நிலையான வைப்பு வட்டி விகிதங்களை உயர்த்திய பின்னர் முன்னணி தனியார் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி மீண்டும் நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் சுமார் 2 கோடிக்கும் குறைவான தொகைக்கான எஃப்டி வட்டி விகிதங்களை ICICI வங்கி உயர்த்தியுள்ளது. அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலங்களில் FD கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை 5 bps உயர்த்தியுள்ளது. மேலும், திருத்தப்பட்ட விகிதங்கள் இன்று (ஜூன் 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Exams Daily Mobile App Download

இது குறித்த ICICI வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, வங்கி வழங்கும் FD விகிதங்கள் தவணைக்காலங்களில் 2.75 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 185 கால வைப்புகளுக்கான FD வட்டி விகிதங்களை ஒரு வருடத்திற்கும் குறைவான தவணைக்காலங்களாகவும், ஒரு வருடம் முதல் இரண்டு வருட காலப்பகுதிகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கியின் புதிய FD வட்டி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், 185 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான கால டெபாசிட்டுகளுக்கு FD விகிதங்கள் 4.65 சதவீதமாக உள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு வெளியீடு!

இதே போல், ஐசிஐசிஐ வங்கி ஜூன் 21 வரை 5.30 சதவீத வருடாந்திர வருவாயைப் பெற்ற ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.35 சதவீத வருடாந்திர வருமானத்தை வழங்குகிறது. என்றாலும் மற்ற தவணைக்காலங்களுக்கான எஃப்டி வட்டி விகிதங்கள் இன்னும் மாறாமல் உள்ளன. அந்த வகையில் 185 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு, 185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை, 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை, 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை மற்றும் 290 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான 4 தவணைகள் கொண்ட டெர்ம் டெபாசிட் விருப்பத்தை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது.

இந்த அனைத்து தவணைக்காலங்களிலும், ஐசிஐசிஐ வங்கி எஃப்டி வட்டி விகிதங்களை 5 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இப்போது ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ள FD வட்டி விகிதத்தின் முழுப் பட்டியலின் கீழ், ஒரு வருடம் முதல் இரண்டு வருட கால டெபாசிட்டுகளுக்கு, ஐசிஐசிஐ வங்கி 1 வருடம் முதல் 389 நாட்கள் வரை, 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது, 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை மற்றும் 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 4 தவணைகளை வழங்குகிறது. இந்த அனைத்து தவணைக்காலங்களிலும், புதிய ஐசிஐசிஐ வங்கி FD வட்டி விகிதம் 5.35 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!