ICICI வங்கி வழங்கும் ரூ.25 லட்சம் உடனடி பணம் – சூப்பர் அறிவிப்பு!
ஐசிஐசிஐ வங்கியானது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறு வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
25 லட்சம் கடனுதவி:
கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மற்றும் தொற்று பாதிப்புள்ள இடங்களை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைய தொடங்கியது. இதனால் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் அவர்களை தொடர்ந்து வணிகத்தில் தக்க வைக்கும் விதமாகவும் ICICI வங்கி புதிய கடன் உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பரில் நேரடி வகுப்புகள்!
இந்த கடன் திட்டத்தில் ICICI வங்கியில் கணக்கு இல்லாத தொழில் நிறுவனங்கள் கூட ஆவணங்கள் இல்லாமல் கடன் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ICICI வங்கி அமேசான் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.25 லட்சம் வரையிலான கடன் தொகையை அதிவேக மற்றும் முற்றிலும் டிஜிட்டல் ஓவர் டிராஃப்ட் (OD) வசதியை ஐசிஐசிஐ வங்கி வழங்குகிறது. இந்த சலுகைக்கு ‘InstaOD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் அல்லாத வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களும் இந்த ஓவர் டிராஃப்ட் வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழக அரசு பணியில் சேர திட்டமிடுபவரா நீங்கள்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இது குறித்த அறிக்கையில், கடன் பெரும் நிறுவனங்களின் கடன் தகுதியின் அடிப்படையில் உடனடி ஓவர் டிராஃப்ட் தொகையை வணிகங்களுக்கு வழங்கப்படும். இதற்காக விற்பனையாளரின் நிதி விவரம் மற்றும் அமேசானில் அவர்களின் பரிவர்த்தனை வரலாற்றின் அடிப்படையில் கிரெடிட் ஸ்கோர் தீர்மானிக்கப்படும். ஓவர் டிராஃப்ட் வசதிக்காக விற்பனையாளரின் தகுதியைத் தீர்மானிப்பதற்கான இந்த கிரெடிட் ஸ்கோர் முறை தொழில்துறையில் முக்கியமானதாகும். ஆனால் விற்பனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அவர்கள் பெற்ற OD தொகைக்கு ஏற்ற வட்டியை செலுத்த வேண்டும்.