ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
ICICI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

வங்கிகளில் வட்டிகளுக்கான ரெப்போ விகிதம் உயர்ந்ததை தொடர்ந்து ICICI வங்கி தற்போது நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு டெபாசிட்டுக்குமான வட்டி விகிதம் தொடர்பான விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FD விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கி வட்டிகளுக்கான ரெப்போ விகிதமாக உயர்த்தியதை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன. இந்நிலையில், நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதாவது, இரண்டு கோடிக்கும் அதிகமான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50% முதல் 5.90% வரைக்கும் வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.50% வட்டியும், 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 3.60% வட்டியும், 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 4.00% வட்டி விகிதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

மேலும், 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 4.75% வட்டியும், 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.25% வட்டியும், 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.40% வட்டியும், 271 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.60% வட்டியும், 1 வருடம் முதல் 5 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6.05% வட்டியும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 5.90% வட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!