ICG இந்திய கடலோர காவல்படையில் வேலை – 70+ காலிப்பணியிடங்கள் || Degree முடித்தவர்கள் தேவை!

0
ICG இந்திய கடலோர காவல்படையில் வேலை - 70
ICG இந்திய கடலோர காவல்படையில் வேலை - 70

இந்திய கடலோர காவல்படையில் (ICG) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Commandant பணிக்கு என 71 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 25.01.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Coast Guard (ICG)
பணியின் பெயர் Assistant Commandant
பணியிடங்கள் 71
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடலோர காவல்படை காலிப்பணியிடங்கள்:

இந்திய கடலோர காவல்படையில் (ICG)  காலியாக உள்ள Assistant Commandant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 71 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • General Duty (GD) – 40 பணியிடங்கள்
  • CPL (SSA) – 10 பணியிடங்கள்
  • Tech (Engg) – 06 பணியிடங்கள்
  • Tech (Elect) – 14 பணியிடங்கள்
  • Law Entry – 01 பணியிடம்
Assistant Commandant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு + Diploma, Graduate Degree, Graduate Degree + Diploma முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

BEML நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Assistant Commandant வயது வரம்பு:
  • General Duty / Technical ஆகிய பிரிவுகளின் கீழ் வரும் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.1998 அன்றைய நாளுக்கு பின்னும் 30.06.2002 அன்றைய நாளுக்கு முன்னும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • Commercial Pilot License பிரிவின் கீழ் வரும் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.1998 அன்றைய நாளுக்கு பின்னும் 30.06.2004 அன்றைய நாளுக்கு முன்னும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • Law Entry பிரிவின் கீழ் வரும் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.1994 அன்றைய நாளுக்கு பின்னும் 30.06.2002 அன்றைய நாளுக்கு முன்னும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Assistant Commandant ஊதியம்:

இந்த இந்திய கடலோர காவல்படை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.56,100/- முதல் ரூ.2,05,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICG தேர்வு முறை:
  • Stage (I) – Screening Test  (CBT)
  • Stage (II) – Computerised Cognitive Battery Test (CCBT) / Picture Presentation & Discussion (PP&DT) / Document Verification
  • Stage (III) – Psychological Test, Group Task, Interview
  • Stage (IV) – Medical Examination
  • Stage (V) – Merit List
ICG தேர்வு கட்டணம்:

Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.250/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

ICG விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 25.01.2023 அன்று முதல் 09.02.2023 அன்று வரை https://joinindiancoastguard.cdac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!