ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICFRE நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) நிறுவனம் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Field Assistant, Junior Research Fellow மற்றும் Project Assistant ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் . எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Forestry Research and Education (ICFRE)
பணியின் பெயர் Field Assistant, Junior Research Fellow and Project Assistant
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் பணியிடங்கள்:

Junior Project Fellow பணிக்கு என 17 பணியிடங்களும், Project Assistant பணிக்கு என 04 பணியிடங்களும், Field Assistant பணிக்கு என 02 பணியிடங்களும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) காலியாக உள்ளது.

ICFRE ஊதிய விவரம்:

Junior Project Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.20,000/- என்றும், Project Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.19,000- என்றும், Field Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.17,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download
ICFRE கல்வி விவரம்:
  • Junior Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Forestry, Botany, Agricultural பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Field Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Science பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN’s Best Coaching Center

ICFRE வயது விவரம்:
  • Junior Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ICFRE தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 24.08.2022 மற்றும் 25.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ICFRE விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!