ஐசிசி உலகக் கோப்பை அணி அறிவிப்பு – கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு!!
உலகக் கோப்பை 2023-க்கான ஐசிசி அணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை 2023-க்கான ஐசிசி அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. இந்த அணியில், 6 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு – அரசின் நடவடிக்கை என்ன?
அதாவது, இந்திய அணியை சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சமி ஆகிய 6 வீரர்களும், ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வேல், ஆடம் ஜாம்பாவும், தென் ஆப்பிரிக்க அணியில் டி காக், நியூசிலாந்து அணியில் டெய்ரி மிட்செல், இலங்கை அணியில் மதுஷன்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.