ICC Test தரவரிசை பட்டியல் – டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!

0
ICC Test தரவரிசை பட்டியல் - டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!
ICC Test தரவரிசை பட்டியல் - டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!
ICC Test தரவரிசை பட்டியல் – டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஐஸ்பிரிட் பும்ரா டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 9 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே போல ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரும் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் முன்னிலை அடைந்துள்ளார்.

பும்ரா முன்னேற்றம்

சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் திறமைகள் மூலம் அவர்கள் ICC யின் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் இன்று (செப்டம்பர் 8) வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டாப்10 வரிசையில் இடம் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரும் முன்னிலை அடைந்துள்ளார்.

India vs England T20 & ODI சீரிஸ் 2022 – அட்டவணை வெளியீடு!

தற்போது இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் போது ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் போட்டியில், பும்ரா எடுத்த 2 முக்கியமான விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக பும்ரா ICC தரவரிசை பட்டியலில் டாப்10 இடத்தில இருந்து, 9 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதே போல டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாகூர் எடுத்த 2 அரைசதங்கள் மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 59 இடங்கள் நகர்ந்து 79 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே போல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் தாகூருக்கு 49 ஆவது இடம் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, 4 ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்த நிலையில் தரவரிசை பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 5 ஆவது இடத்தில் நீடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனுடன் இங்கிலாந்து வீரர் போப், இந்தியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் அடித்ததன் மூலம் தரவரிசை பட்டியலில் 9 இடங்கள் நகர்ந்து 49 ஆவது இடத்தை அடைந்துள்ளார். அதே போல இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 7 இடங்களுக்கு முன்னேறி 87 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து வீரர் ராபின்ஸன் 3 இடங்கள் வரை முன்னேறி 33 ஆவது இடத்தை அடைந்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!