ICC T20 உலகக்கோப்பை திருவிழா – ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த IND vs PAK போட்டி டிக்கெட்டுகள்!

0
ICC T20 உலகக்கோப்பை திருவிழா - ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த IND vs PAK போட்டி டிக்கெட்டுகள்!
ICC T20 உலகக்கோப்பை திருவிழா - ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த IND vs PAK போட்டி டிக்கெட்டுகள்!
ICC T20 உலகக்கோப்பை திருவிழா – ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த IND vs PAK போட்டி டிக்கெட்டுகள்!

சமீபத்தில் 2022 ஆண்டுக்கான ICC 20 ஓவர் ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியானது. இதில் இந்திய அணி கடந்த ஆண்டை போல் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு விற்பனைக்கு வந்த இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

ICC T20 உலகக் கோப்பை:

இந்த ஆண்டுக்கான ICC 20 ஓவர் ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி முடிவடைகிறது . முதல் சுற்று போட்டியில் இலங்கை, நமிபியா அணிகள் அக்டோபர் 16 ஆம் தேதி மோதுகின்றன. இத்தொடரை இந்திய அணி மொத்தம் 5 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஜிலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.

பிப்.24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்? அத்துமீறும் குற்றங்கள்! அரசின் நடவடிக்கை என்ன?

2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் விளையாட உள்ளது. இதில் 12 அணிகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள 4 அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ICC தெரிவித்துள்ளது. இந்த 16 அணிகளும் குரூப்-1 மற்றும் குரூப்-2 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டை போல இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இப்போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் (எம்சிஜி) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

IPL மெகா ஏலம்: மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் குறிவைக்கும் 3 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்நிலையில் இன்று இப்போட்டிக்கான பொது டிக்கெட் ஒதுக்கீடுகள் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்று பொது மக்களுக்கு விற்பனைக்கு வந்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றது அனைத்து தரப்பிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் போட்டியிடும் இந்திய பாகிஸ்தான் போட்டிக்கு 800,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்றது. எனவே இம்முறை இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!