ICC T20 WC 2021: இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்! வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் அணியில் சேர்ப்பு!!

0
ICC T20 WC 2021 இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்! வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் அணியில் சேர்ப்பு!!
ICC T20 WC 2021 இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்! வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் அணியில் சேர்ப்பு!!

ICC T20 WC 2021: இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்! வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் அணியில் சேர்ப்பு!!

ஐசிசி T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய அணிக்கான ஜெர்ஸி மாற்றப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்:

இந்தியாவில் நடைபெற்று வந்த IPL போட்டிகள் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன. இவற்றில் வெற்றி பெறும் அணி மகுடத்திற்கான இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் அக்டோபர் 15ம் தேதி சந்திக்கும். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆண்களுக்கான T20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17ம் தேதி முதல் துவங்க உள்ளது.

அதில் இந்திய அணி 24ம் தேதி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்க உள்ளது. அதற்கான இந்திய அணி முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணியின் ஜெர்ஸி மாறப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய சீருடையை கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ராகுல், பும்ரா ஆகியோர் அணிந்து அறிமுகம் செய்யும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இந்த ஜெர்ஸி அணிந்து கொண்டு தான் விளையாட உள்ளனர்.

வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாகூர் சேர்ப்பு!

உலக கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அங்கம் வகித்த ஹர்டிக் பாண்டியா ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இதனால் அவரது பார்மில் சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது இந்திய அணியில் மற்றொரு வீரராகவும், ஹர்டிக் பாண்டியாவிற்கு பதில் மற்றொரு ஆல் ரவுண்டராகவும் செயல்பட ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் வலைப்பயிற்சி வீரராக ஏற்கனவே அவேஷ் கான் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயரும் தேர்வாகி உள்ளார். இளம் வீரரான வெங்கடேஷ் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடி பேட்டிங் ஆர்டரினால் கவனம் ஈர்த்துள்ளார். ஷர்துல் தாகூர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் வருகை ஹர்டிக் பாண்டியாவிற்கு சிக்கலுக்கு எழுந்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!